வேலையை விட்டு சென்ற கோபம் – கார் டிரைவர் மீது தாக்குதல்

கோவை:வேலையை விட்டு சென்றதற்கான ஆத்திரத்தில் கார் டிரைவரை கண்ணாடி டம்ளரால் தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

டிரைவர்கள் வேலையை விட்டு நின்றதால், கார் டிரைவரை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (49). டிரைவர். இவர் கடந்த ஒரு ஆண்டாக வேணுகோபால் என்பவருக்குச் சொந்தமான காரை ஓட்டி வருகிறார். இதற்கு முன்பு, கடந்த 2020ஆம் ஆண்டு வெங்கடாசலம் என்பவருக்குச் சொந்தமான காரை ஓட்டி வந்தார்.

அப்போது டிரைவர்கள் பற்றாக்குறை காரணமாக, செந்தில்குமாரை பகல் மற்றும் இரவு என இரு நேரங்களிலும் தொடர்ந்து கார் ஓட்டுமாறு வெங்கடாசலம் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட செந்தில்குமார், கடந்த 2025ஆம் ஆண்டு தனது பணியில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து வெங்கடாசலத்திடம் பணிபுரிந்து வந்த மேலும் மூன்று டிரைவர்களும் அடுத்தடுத்து வேலையை விட்டு நின்றனர்.

இதற்கு காரணம் செந்தில்குமார் தான் என நினைத்த வெங்கடாசலம், அவர்மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

Advertisement

இந்த நிலையில், நேற்று காலை அவினாசி சாலையில் உள்ள ஒரு பேக்கரி முன்பு செந்தில்குமார் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடாசலம் மற்றும் அவருடன் பணிபுரியும் சதீஷ்குமார் (32) ஆகியோர், செந்தில்குமாரிடம் திடீரென தகராறில் ஈடுபட்டனர்.

ஆத்திரமடைந்த வெங்கடாசலம், செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். சதீஷ்குமார், தனது கையில் இருந்த கண்ணாடி டீ டம்ளரை அவரது முகத்தில் வீசி தாக்கினார்.

இதில் செந்தில்குமாருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து செந்தில்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கரூரைச் சேர்ந்த சதீஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...