கோவை: கோவையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வண்ணம் தேர்தல் ஆணையம் சார்பிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 27,44,472 வாக்காளர்கள் உள்ளனர் 3540 வாக்கு பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன அதுமட்டுமின்றி ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் 182 பதற்றமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பானது போடப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்கினை செலுத்தி அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்தனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் ஓரிரு சந்தேகங்களையும் தீர்த்து வைத்தனர்.
இதனை அடுத்து ஏழு மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்கினை செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


