2 மாதமாக சிக்காத நேபாள தம்பதி – கோவை மூதாட்டி கொலை வழக்கில் தீவிர தேடல்

கோவை: கோவையில் நடந்த மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய நேபாள தம்பதியை போலீசார் 2 மாதங்களாக தேடி வருகின்றனர்.

Advertisement

கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த டாக்டர் ராம்குமார் குட்டி. இவரது தாயார் கஸ்தூரி (82). வயோதிகத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு உதவியாக வீட்டு வேலை செய்ய நேபாளத்தை சேர்ந்த சுர்ஜா (42) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.

வீட்டில் நகை மற்றும் பணம் இருந்ததை பார்த்ததும் சுர்ஜாவுக்கு அதை கொள்ளையடிக்க ஆசை ஏற்பட்டது.

கோவையில் சாலையில் ஓடித்திரியும் குட்டி யானையை தாயுடன் சேர்க்க போராட்டம்! வீடியோ காட்சிகள்

Advertisement

அதற்கான திட்டத்தை தீட்டினார். உடனே அவர் நேபாளத்தில் இருக்கும் தனது கணவர் ராஜூ (45) மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கடந்த மாதம் 6ஆம் தேதி நேபாளத்தை சேர்ந்த சுர்ஜாவின் கணவர் ராஜூ (45), தனது உறவினர்களான ராகேஷ் சவுத் (26), திலீப் சாகி (24), தாமூர் புக்தா (25) ஆகியோருடன் கோவை வந்து, கஸ்தூரியை கொலை செய்து, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

இது குறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தனிப்படை போலீசார் பெங்களூருவில் வைத்து ராஜூவின் உறவினர்களான ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமூர் புக்தா ஆகியோரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இஸ்ரேலில் வேலை- கோடிக்கணக்கில் மோசடி என கோவையை சேர்ந்த நிறுவனம் மீது புகார்…

தொடர்ந்து தலைமறைவாக உள்ள நேபாள நாட்டு தம்பதியான ராஜூ – சுர்ஜாவை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே, தம்பதியினர் நேபாள நாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக ஒன்றிய அரசு மூலம் நேபாள நாட்டுக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

அங்கு பதுங்கி இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கொலை, கொள்ளை நடந்த கிட்டத்தட்ட 2 மாதங்களாகியும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. தம்பதியினர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

போலீசார் கூறுகையில், “தம்பதியை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் பிடித்து விடுவோம்” என்றனர்.

பாலியல் சீண்டல்.. பிரபல இசையமைப்பாளர் மீது பாடகி பரபரப்பு புகார்!

News Clouds Coimbatore

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...