அதிவேகமா? கட்டுப்பாடு இழந்த பைக் – கோவையில் துயரம்

கோவை:சத்தி ரோட்டில் பைக் தடுப்பு சுவரில் மோதி காயமடைந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கே.வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (27). இவர் கோவை ராம் நகரில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கோவையில் மாயமான காட்டெருமை… வனத்துறையினர் தேடல்

இந்நிலையில், நேற்று முன்தினம் அஜித்குமார் பைக்கில் சத்தி ரோடு, சிஎம்எஸ் பள்ளி எதிரே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானார்.

Advertisement

இந்த விபத்தில் அவருக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இனி ஜிடி மேம்பாலத்தில் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; ஸ்மார்ட் கண்காணிப்பு துவக்கம்

Advertisement

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...