கோவையில் அதிர்ச்சி, அபார்ட்மெண்டில் மூதாட்டி கொ* செய்யப்பட்டு நகை பறிப்பு…!

கோவை: கோவை சுங்கம் பகுதியில் அபார்ட்மெண்டில் தனியாக வசித்த பெண் கழுத்து நெரித்து கொ* செய்யப்பட்டு, நகை கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

சுங்கம் – ராமநாதபுரம் திருச்சி சாலையில் உள்ள ரமணிஸ் அபார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்த முன்னாள் பத்திரப்பதிவுத்துறை பதிவாளர் தங்கராஜின் மனைவி கோமதி (65) கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் திருச்சி சாலையில் கே.டி.சி. எதிர்ப்புறம் ஜமீன்தார் ரெஸ்டாரண்ட் அருகே நடைபெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட கோமதியின் மகள் லண்டனில் வசித்து வருகிறார்.

Read news: காதலுக்கு எதிர்ப்பு; மெசேஜ் அனுப்பி மாயமான கோவை கல்லூரி மாணவி

Advertisement

அவர் இன்று காலை தன் அம்மாவை பார்க்க கோவைக்கு வந்துள்ளார், அப்போது அவர் வீட்டுக்குள் சென்றபோது அவரின் தாயார் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில், கோமதி அணிந்திருந்த தங்கச் செயின், கம்மல் மற்றும் செல்போன் ஆகியவை காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ள பிற பொருட்கள் அப்படியே இருந்ததால், நகைக்காகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Read news : மனைவிக்கு தொல்லை; நண்பனை தென்னந்தோப்பில் புதைத்த தம்பதி; பொள்ளாச்சியில் பரபரப்பு!

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள பார்சன் அபார்ட்மெண்டில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...