கோவை: பேட்மேன்’ (Padman) என உலகப் புகழ்பெற்ற கோவையைச் சேர்ந்த சமூகத் தொழில்முனைவர் அருணாச்சலம் முருகானந்தம், இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்திற்காக மலிவு விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டறிந்து, உலகளாவிய சுகாதாரப் புரட்சியை ஏற்படுத்தியதற்காக இவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
எளிய பின்னணியில் இருந்து வந்து, கிராமப்புற பெண்களின் ஆரோக்கியத்திற்காக இவர் உருவாக்கிய தொழில்நுட்பம் இன்று இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது.
இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான ‘பேட்மேன்’ திரைப்படம், இவரை உலக அரங்கில் கொண்டு வந்தது.
Read news: காதலுக்கு எதிர்ப்பு; ‘தற்கொலை’ மெசேஜ் அனுப்பி மாயமான கோவை கல்லூரி மாணவி
ஏற்கனவே மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்துள்ள நிலையில், தற்போது உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசுக்கான ரேஸில் இவர் இணைந்துள்ளார்.
மொத்தம் 208 தனிநபர்கள் மற்றும் 79 அமைப்புகள் என 285 பெயர்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், அதில் ஒருவராக முருகானந்தத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து அவர் பேசுகையில்,
Read news: கோவை ரயில் நிலையத்தில் 350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்- மர்ம நபர்களை தேடும் போலீஸ்…
“கடந்த 40 ஆண்டுகளாக இதற்காக உழைத்து வருகிறேன். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே இது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ள நிலையில், லடாக் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் பயிற்சியை கொண்டு சேர்த்துள்ளோம். 800 கோடி மக்கள் வாழும் உலகில், நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட 208 பேரில் நானும் ஒருவன் என்பதே இந்தியாவிற்கு பெருமை. இந்திய அரசின் உயரிய விருதைத் தொடர்ந்து கிடைக்கும் இந்த உலகளாவிய அங்கீகாரத்தை சாதனையாகக் கருதுகிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கோவையின் ஒரு எளிய மனிதர் இன்று உலக அரங்கில் அமைதிக்கான தூதுவராக உயர்ந்து நிற்பது, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.



