கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு TVK எம்.எல்.ஏ விடுத்த எச்சரிக்கை…

கோவை: டாஸ்மாக் கடைகளுக்கு கிணத்துக்கடவு தொகுதி தவெக எம்.எல்.ஏ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Advertisement

கோவை கிணத்துகடவு தொகுதியில் தவெக வேட்பாளர் விக்னேஷ் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்த அவருக்கு த.வெ.க.கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என உற்சாக வரவேற்பு வழங்கினர்.

சட்டமன்ற அலுவலக வளாகத்திலே பொதுமக்களிடம் நன்றி கூறி பேசிய அவர்,தற்போது குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக , குடிநீர் வடிகால் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளதாக கூறினார்.

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக தனது நொகுதியக மாற்றுவேன் என உறுதியாக கூறிய அவர்,சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட தனது சொந்த செலவிற்கு தொட மாட்டேன் என உறுதி கூறுவதாக தெரிவித்தார்.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் தனி சிறப்புகள் இருப்பதை போன்று கிணத்துக்கடவு தொகுதியையும் அனைத்து வசதிகள் கொண்ட தொகுதியாக மாற்றுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement

மது மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டை இந்த தொகுதியில் முழுமையாக ஒழிப்பதே இலட்சியம் என தெரிவித்த அவர்,தனது கிணத்துகடவு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரங்களை கடந்து கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தால் பொதுமக்களை திரட்டி காவல்நிலையத்தை முற்றுகை இடுவேன் என அதிரடியாக தெரிவித்தார்.

இந்த தொகுதியில் நீண்ட காலமாக இருக்கும் வெள்ளலூர் குப்பை கிடங்கு தொடர்பான விவகாரத்தில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...