முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வேண்டும்- கோவை இளைஞரின் கோரிக்கை…

கோவை: முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டுமென ஐடி ஊழியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கோவையை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் வீரகேரளம் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற ஐடி ஊழியர் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இது குறித்து அரவிந்த் கூறுகையில், அந்த இரண்டு நாட்களையும் துக்க நாளாக அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். துக்கநாளாக அவற்றை அறிவித்தால்தான் இளைஞர்களுக்கு அது பற்றி தெரியும் என்றும் தற்போதைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கியுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

Advertisement

அரசியல் மாற்றம் என்பது சமூக மாற்றமாக மாறாது என்று குறிப்பிட்ட அவர் கல்வி மற்றும் விழிப்புணர்வை சமூக மாற்றமாக கொண்டு வர வேண்டும் என்றும் அப்பொழுதுதான் ஒழுக்கம் வரும் என்று தெரிவித்தார்.

சமூக மாற்றம் வரும் பொழுது தான் ஆணவக் கொலை பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை குறையும் என்றும் குறிப்பிட்டார். தற்போதைய முதல்வர் ஓட்டுக்கு பணம் தருவது ஜாதியின்றி வாக்களிப்பது போன்ற சமூக மாற்றங்களை உருவாக்கி இருக்கிறார் என்று தெரிவித்த அரவிந்த் இன்னும் அவர் அதிக விஷயங்களை செய்வார் என்று நம்பி இருப்பதாக தெரிவித்தார்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...