கோவையில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள்..! 27ம் தேதி கோலாகல துவக்கம்..!

கோவை: கோவையில் தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் வருகிற மே 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தமிழ்நாடு கூடைப்பந்து கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கூடைப்பந்து கழக துணைத் தலைவரும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளருமான பாலாஜி மற்றும் துணை செயலாளர் தீபாலா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகமும் இணைந்து சர்வதேச தரத்திலான செமி உள்விளையாட்டு அரங்கத்தை அமைத்துள்ளன.

CLICK HERE TO READ NEWS: நடுரோட்டில் பெண்ணிடம் ரகளை..! ஆடையை இழுத்த வாலிபர் கைது..!

Advertisement

இந்த அரங்கில் நடைபெறும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

போட்டிகள் மே 27ம் தேதி மாலை துவங்கி, தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வ.உ.சி. பூங்கா உள்விளையாட்டு கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறும். பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO READ NEWS:தலை, கைகளில் கட்டு- கோவை ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்…

மே 27ம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. தொடர்ந்து மே 31ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.