வாகன சோதனையில் சிக்கிய லாரி..! கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்..!

கோவை:கோவையில் லாரியில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 2 பேரை கைது செய்துள்ளனர்.

கோவை சுங்கம் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

லாரியில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை தீவிரமாக சோதனை செய்தனர்.

Advertisement

அதில், லாரியில் 10 கிலோ கஞ்சா மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28), அருண்குமார் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்றும், அவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பெட்ரோல் விலை கட்டுப்பாட்டுக்கு மத்திய அரசு நடவடிக்கை- இணை அமைச்சர் சுரேஷ்கோபி கோவையில் பேட்டி…

கோவை: பெட்ரோல் விலை கட்டுப்பாட்டுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.