ரயில் பயணிகளுக்கு அலர்ட்; ஜூன் 5, 7 தேதிகளில் முக்கிய அறிவிப்பு!

கோவை:பெருந்துறை ரயில்வே யார்டில் தண்டவாள புதுப்பிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஈரோடு (Erode) – திருப்பூர் (Tiruppur) ரயில் பாதை பிரிவில் உள்ள பெருந்துறை (Perundurai) ரயில்வே யார்டில் தண்டவாள புதுப்பிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli) – பாலக்காடு டவுன் (Palakkad Town) எக்ஸ்பிரஸ் ரயில் எண் 16843, திருச்சிராப்பள்ளியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் நிலையில், ஜூன் 5 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில் ஈரோடு சந்திப்பு (Erode Junction) வரை மட்டுமே இயக்கப்படும்.

இதனால் அந்த நாட்களில் ரயில் சேவை ஈரோட்டில் நிறுத்தப்பட உள்ளது.

Advertisement

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், அதே நாளில் ஈரோடு சந்திப்பில் இருந்து பாலக்காடு டவுன் வரை, ரயில் எண் 16843-ன் வழக்கமான நிறுத்தங்களுடன் முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெருந்துறை ரயில்வே யார்டில் நடைபெறும் தண்டவாள புதுப்பிப்பு பணிகளை முன்னிட்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகள் இதனை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறும் ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...