விரைவில் திறக்கப்பட உள்ள பொருட்காட்சி- கோவை ஆட்சியர் ஆய்வு…

கோவை: கோயமுத்தூர் வ உ சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி 11ஆம் தேதி துவங்கப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

கோவை மாநகராட்சி வஉசி மைதானத்தில் தமிழ்நாடு மக்கள் செய்தி தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு திட்டங்கள் தொடர்பான பல்வேறு அரங்குகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் இடம்பெறுகின்றன. மேலும் பல்வேறு உணவகங்களும் இதில் இடம்பெறவுள்ளது.

வருகின்ற 11ஆம் தேதி இந்த பொருட்காட்சியை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொருட்காட்சியில் உள்ள அரங்குகள் எல்லாம் தயார் நிலையில் உள்ளனவா என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது பொது மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...