கோவையில் சிறுபான்மையினர் நல விடுதியில் சேருவதற்கான தகுதி மற்றும் இறுதி தேதி அறிவிப்பு…

கோவை: கோவையில் சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர்வதற்கான தகுதிகளும் இறுதி தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நல விடுதிகள் மசக்காளிப்பளையம்
சுந்தராபுரம் பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

இந்த விடுதியில் சேர்வதற்கான தகுதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவமாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அனைத்து விடுதி மாணவ மாணவியர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

Advertisement

விடுதிகளில் மாணவமாணவியர்கள் சேர்க்கைக்கான தகுதிகள்:
பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.

51 தகுதியுடைய மாணவ மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2026-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே கல்லூரி மாணவ மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கூடலூர் நகராட்சியில் எம்.எல்.ஏ சுனில் ஆனந்த் கள ஆய்வு…

கோவை: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் எம்எல்ஏ சுனில் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த குடிநீர் தொட்டியினை சரிசெய்ய உத்தரவிட்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி பகுதிகளில்...

Latest News Coimbatore

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.