கோவைக்கு இன்று கனமழை எச்சரிக்கை…

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழையானது பெய்து வருகிறது. குறிப்பாக கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது.

அதன்படி கோவை நீலகிரி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் மிதமான மழையும் தொடர் மழையும் பெய்து வருகிறது. கோவை மாநகரில் நேற்று(08.06.2026) மாலை பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் இன்று(09.06.2026) கோவை நீலகிரி உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, நெல்லை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...