கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பலரும் அவர்களது குறைகளை அளித்தனர்.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா, இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 49 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement

இவற்றில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் என ஐந்து மண்டலங்களிலும் மற்றும் பிரதான அலுவலகத்திலும் என மொத்தம் 49 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர்கள், பொதுமக்கள் அளித்த இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள். பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

coimbatore-corporation-grievance-meeting

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜனநாயகன் பார்த்து அழுவது ஏன்?- கோவை அமைச்சரின் உருக்கமான விளக்கம்…

கோவை: ஜனநாயகன் படம் பார்த்து அழுதது குறித்து அமைச்சர் சம்பத்குமார் விளக்கம் அளித்துள்ளார். கோவை மாநகராட்சி 83வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி., மைதானம் அருகே வாலிபால், கபடி மற்றும் இறகுப்பந்து போட்டிக்கான உள்ளரங்கு விளையாட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...