மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகள் மீட்பு – வீடியோ காட்சிகள்

கோவை: கோவையில் சிக்னல்களில் பச்சிளம் குழந்தைகளை வைத்து லாவகமாகப் பிச்சை எடுத்த கும்பலைப் பிடித்த இளைஞர்கள், அவர்களிடமிருந்து குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில், பச்சிளம் குழந்தைகளைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு கும்பல் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வருகிறது.

கடும் வெயில் மற்றும் மழையிலும் குழந்தைகளை சாலையில் தூக்கியபடி பிச்சை எடுக்கும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்று அப்பகுதியைச் சேர்ந்த நேதாஜி நண்பர்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள், குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தவர்களை மடக்கிப் பிடித்தனர்.

மேலும், இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவிற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் அனைவரும் தற்போது மாவட்ட குழந்தைகள் காக்கும் மையத்தில் (Children Welfare Home) பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், குழந்தைகளைத் துன்புறுத்தி பிச்சை எடுக்க வைத்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

முதல்வர் விஜய்க்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்றவர்கள் கைது

கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய சிக்னல்களில் இதுபோன்று பச்சிளம் குழந்தைகளை வைத்து, கடத்தல் கும்பல் மற்றும் வடமாநிலத்தவர்கள் பிச்சை எடுப்பது தற்போது அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு பொதுமக்கள் தொலைபேசி மூலம் தகவல் அளித்தாலும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உரிய நேரத்தில் வராமல் மெத்தனமாக செயல்படுவதாக இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

மேலும், கோவையில் இனிவரும் நாட்களிலாவது இதுபோன்ற பச்சிளம் குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுக்கும் மாஃபியா கும்பல்களைக் கண்டறிய காவல்துறையும், சமூக நலத்துறையும் இணைந்து சிக்னல்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...