கோவை: உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ இரத்த தானம் செய்தார்.
உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ரத்தம் தானம் செய்தார்.
ஜீன் 14 ம் நாளான இன்று உலக இரத்த தானம் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் த வெ க கட்சி அலுவலகத்தில் வி ஜி எம் மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர்.
இந்நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் முதல் நபராக பங்கேற்று இரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இரத்த தானம் செய்தனர்.


