கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் அதிரடி அறிவிப்பு…

கோவை: அரசு விதிமுறைகளை மீறினால் நாங்களே புகார் அளிப்போம் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

அரசு நிர்ணயித்த எடையில் மட்டுமே இனி லாரிகளை இயக்க வேண்டும், எடை அதிகமாக ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாங்களே புகார் மனு அளித்து வலியுறுத்துவோம் என்று கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில், கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது. சங்க நிர்வாகிகள், பரசுராமன், செந்தில் குமார், தமிழரசன், தினேஷ் குமார் ஆகியோர் கூட்டாக கூறியதாவது கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக, 4,5 மற்றும் 6ம் தேதி என மூன்று நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.


இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட லாரிகள், கோவை மாவட்டத்தில் மட்டும் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாகவும், இதனால் ஒரு நாளைக்கு 18 லட்சம் இழப்பு ஏற்படும் என்ற நிலை உள்ளது. மேலும் இந்த தொழிலை நம்பி, உள்ள சுமார் 3000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கும் நிலை உள்ளது. இந்த போராட்டம் நடத்த முக்கிய காரணம் அதிக எடையுடன் செங்கல்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு அதிக அளவில் காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர்.

Advertisement

ஆர் டி ஒ அதிகாரிகள் லாரிகளை சிறை பிடிக்கின்றனர் இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்க படுகின்றனர். இதனால் அரசு நிர்ணயித்த எடையின் அளவில் லாரிகளை இயக்க உள்ளதாகவும், ஜிஎஸ்டி பில் இல்லாமல் செங்கல்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இருந்து செங்கல்களை வாங்க மாட்டோம், வேலை நிறுத்த நாட்களில் செங்கல்கள் உற்பத்தியாகும், சேலம், பழநி, தாராபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும், வெளி மாவட்ட லாரிகளை, எங்களது போராட்ட நாட்களில், லாரிகள் வந்தால் அதனை சிறை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.

எங்களது சங்கத்தின் இந்த கோரிக்கையை ஏற்று, பல்வேறு மாவட்ட லாரி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், வெளி மாவட்டங்களில் உள்ள சேம்பர் உற்பத்தியாளர்கள், செங்கல் விலையை குறைக்க வேண்டும், அதிக விலைக்கு செங்கல்களை விற்பனை செய்வதால் கட்டுமான தொழில் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகுவதாக தெரிவித்தார். மேலும் டீசல் விலை உயர்வு,

Advertisement

உதிரி பாகங்கள் விலை உயர்வு, சாலை வரி உயர்வு, உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதால், இத்தகைய போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...