கோவையில் ஆய்வுகளை மேற்கொண்ட வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர்…

கோவை: கோவையில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

Advertisement

இக்கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகர், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், தலைமைப் பொறியாளர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (ஊரகம்) (சென்னை) சரவணன், உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டிய இடங்கள், கணபதி உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்சிங்காநல்லூர் மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புத் திட்டங்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வகை, பரப்பளவு மற்றும் வாடகை விவரங்கள், மனைகளின் விவரங்கள்.

விற்பனை செய்யப்பட வேண்டிய மனைகளின் விவரங்கள். தனியார் கட்டுமான அமைப்புகள் மற்றும் நலச்சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மறு கட்டுமானத் திட்டங்கள், பொள்ளாச்சி தவணைமுறை அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்கள்.

சீரநாயக்கன்பாளையம் தவணைமுறை அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டம் அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகளின் மறு கட்டுமானத் திட்டங்கள், சரவணம்பட்டி, கணபதி மற்றும் சிங்காநல்லூரில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புத் திட்டங்கள்.

இடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள வாரியக் கட்டிடங்களின் விவரங்கள், ரேஸ்கோர்ஸ் ஃபேஸ்-I காலனி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வளாகம் தொடர்பான விவரங்கள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களின் முன்னேற்ற நிலை. தீர்வு காணப்பட வேண்டிய நிலுவை விவரங்கள். திட்டங்களின் சுருக்க அறிக்கைகள், நிலம் கையகப்படுத்தும் பணிகளின் தற்போதைய நிலை.

மனுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை மற்றும் அதன் தற்போதைய நிலை, இழப்பீடு வழங்கப்பட்ட வழக்குகளின் விவரங்கள்தடுப்புச் சுவர் மற்றும் தளவமைப்பு தொடர்பான பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க தேவையான அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், மாவட்டத்தில் உக்கடம் சி.எம்.சி. காலனி, வெரைட்டி ஹால் சாலைஎழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் பொதுமக்களின் கோரிக்கையின் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்குறிப்பாக அடிப்படை வசதிகள் கோரி விண்ணப்பிக்கும்போது முன்னுரிமை அளிக்குமானும்தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ரேஸ்கோர்ஸ், மேற்பார்வை பொறியாளர் காவல் கண்காணிப்பாளர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு வளாக பகுதியினையும், மாவட்ட வன அலுவலர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு வளாகப் பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் குப்பை மேலாண்மைக்கு எதிர்ப்பு…

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் குடியிருப்பு பகுதிக்குள் குப்பை மேலாண்மை மையம் அமைக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

Latest News Coimbatore

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.