உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் கால அவகாசம் நீட்டிப்பு…

கோவை: உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50,000/ வரை உள்ள வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிவாசல்களில் பணியாற்றும் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ், இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30.06.2026-லிருந்து 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.

Advertisement

இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் 15.07.2026ம் தேதிக்குள் ரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கணபதி மாநகரில் புதிய பூங்கா- ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கணபதி மாநகரில் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மரக்கன்றை நட்டு வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...