அன்னதானம் அறம் அறக்கட்டளை சார்பில் 180 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

கோவை : கோவை பேரூரில் அன்னதானம் அறம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 180 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

கோவை அன்னதானம் அறம் அறக்கட்டளை சார்பில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா பேரூரில் நடைபெற்றது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் 180 மாணவ, மாணவிகள் பங்கேற்று கல்வி ஊக்கத்தொகையை பெற்றனர். இதில் ஒற்றைப் பெற்றோர் (Single Parent) குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

Also Read: அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்- EPS க்கு SPV வேண்டுகோள்…

விழாவில் பேசிய அறக்கட்டளையின் செயலாளர் பிரகாஷ், “கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினோம். இந்த ஆண்டு 180 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம்” என்றார்.

மேலும், “பசித்தோருக்கு உணவு, எளியோருக்கு கல்வி, நலிந்தோருக்கு மருத்துவ உதவி என்ற நோக்கத்துடன் அறக்கட்டளை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் சுமார் 200 பேருக்கு உணவு வழங்கி வருகிறோம்.

Advertisement

Also Read: கோவை உளவுத்துறை அதிகாரிகள் மாற்றம்… பாதுகாப்பு பாதிக்கப்படுமா?

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு கட்டங்களில் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளோம். வரும் காலங்களில் மேலும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் வகையில் எங்களது சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் கருப்புசாமி, வடிவேல், பிரகாஷ், சரவணன், தமிழரசு, ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், செந்தில்குமார், வெள்ளிங்கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...