நாய் குலைத்ததால் ஆத்திரம்- பக்கத்து வீட்டார் செய்த கொடூரம்- கோவையில் அரங்கேறிய சம்பவம்…

கோவை: நாயை குத்தி கொலை செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலத்துறை முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் பொமேரியன் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

Advertisement

அதே சமயம் அவரது அண்டை வீட்டாரான விமல் என்பவர் நாய் குலைத்துக் கொண்டே இருப்பதாக அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி ரஞ்சித் குமாரின் வளர்ப்பு நாய் குலைத்ததால் ஆத்திரம் அடைந்த விமல் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு அந்த நாயை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

இது குறித்து ரஞ்சித்குமார் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அச்சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் மதுக்கரை காவல்துறையினர் விமல் மீது BNS 325(விலங்குகளை கொல்வது, விஷம் வைப்பது) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து விமலிடம் தொடர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வேஸ்ட் பொருட்களால் உருவாக்கப்பட்ட வனம்- கணியூர் சென்றால் மிஸ் செய்ய கூடாது…

கோவை: தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வனம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கோவையில் தானியங்கி சொட்டுநீர் பாசனத்துடன், தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘கோவை ஊரக வனம்’...

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.