திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் புறப்பட்ட தம்பதி- கோவையில் சுவாரஸ்யம்…

கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் விக்ரம் கோவையை சேர்ந்த விகாஷினி இருவருக்கும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் திருமணம் நடைபெற்றது.

Advertisement

புதுமணத் தம்பதியினருக்கு புதிதாக தார் கார் வாங்கி கொடுத்துள்ளனர். இருந்த போதிலும் மணமகன் தனது பண்ணை வீட்டுக்கு தான் மூதாதையர்கள் பயன்படுத்திய பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியிலேயே புதுமண பெண்ணை அமர வைத்து அவரே மாட்டு வண்டியை ஓட்டி வீட்டுக்கு சென்றார்.

இவர்களுடன் உறவினர்கள் காரில் அணிவகுத்து பின்னே சென்றனர். மாட்டு வண்டியில் சென்ற புதுமண தம்பதியினரை அனைவரும் வியப்புடன் பார்த்து வாழ்த்தி சென்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் தொடர் திருட்டு வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் மீது பாய்ந்த குண்டர் தடுப்பு சட்டம்…

கோவை: கோவை மாவட்டத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்டம், கோமங்கலம் காவல்...

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.