கோவை மாவட்ட ஆட்சியருக்கு ஒரே நாளில் 8 வழக்குகளில் அபராதம்- நீதிமன்றம் உத்தரவு…

கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தொடர் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Advertisement

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்
அரசு வழக்கறிஞர்கள் இன்னும் நியமிக்கப்படாத நிலையில் , 8 வழக்குகளில் அரசு வழகறிஞர் ஆஜராகாததால் கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஒரே நாளில் 62,000 ரூபாய் அபராதம் விதித்து 5 வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றிய வந்த அரசு வழகறிஞர்களின் பணிக்காலம் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதியுடன் நிறைவடைந்தது. கோவையிலும் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் பணிக்காலம் முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து புதிய அரசு வழக்கறிஞர்களுக்கான உத்தரவுகள் இன்னும் வழங்கப்படாததால் நீதிமன்றத்தில் பொறுப்பு ஏற்க முடியவில்லை.

இதன் காரணமாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு வழக்கறிஞர்கள், வழக்காடிகள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 5 வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் 8 வழக்குகளில் கூடுதல் அரசு வழகறிஞர்கள் ஆஜராகாததால் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமாருக்கு 62,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கருமத்தம்பட்டி கொலை வழக்கு, ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் என விசாரணைக்கு வந்த மொத்தம் எட்டு வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் இல்லாததால் 62 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து 5 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...