கோவை: ஜூலை 29 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திட்டமிட்ட மின் தடை அமல்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 29, செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
ஆர்.எஸ்.புரம் (R.S. Puram) துணை மின் நிலையம்:
ஆரோக்கியசாமி சாலை (Arokiyasamy Road), ராமச்சந்திரா சாலை (Ramachandra Road), டி.பி. சாலை (D.B. Road), லாலி சாலை (Lawley Road), தடாகம் சாலை (Thadagam Road), கவுலி பிரவுன் சாலை (Gowlybrown Road), டி.வி.சாமி சாலை (T.V. Samy Road), சுக்கிரவார்பேட்டை (Sukkirawari Pet), காந்தி பூங்கா (Gandhi Park), கோபால் லே-அவுட் (Gopal Layout), சாமியார் நியூ ஸ்ட்ரீட் (Samiyar New Street), இடையர் தெரு (Idaiyar Street), ராஜா தெரு (Raja Street) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
சின்னத்தடாகம் (Chinnathadagam) துணை மின் நிலையம்:
சின்னத்தடாகம் (Chinnathadagam), ஆனைகட்டி (Anaikatti), நஞ்சுண்டாபுரம் (Nanchundapuram), பண்ணிமடை (Pannimadai – சில பகுதிகள்), பெரியதடாகம் (Periyathadagam), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
நெகமம் (Negamam) துணை மின் நிலையம்:
காட்டம்பட்டி (Kattampatty), ஆர்.சி.புரம் (R.C. Puram), ஜே. கிருஷ்ணாபுரம் (J. Krishnapuram), நெகமம் (Negamam), வடச்சித்தூர் (Vadachithur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
காலை 9:00 மணி – மாலை 5:00 மணி





