போதைப்பொருளுக்கு எதிராக கோவை போலீசார் நடத்திய மாரத்தான்; குவிந்த மக்கள்!

கோவை: கோவை மாவட்ட போலீசார் சார்பில் நடைபெற்ற “போதைப்பொருள் இல்லா கோவை 2026” மாரத்தானில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Advertisement

கோவை மாவட்ட போலீசார் சார்பில் நடைபெற்ற “போதைப்பொருள் இல்லா கோவை 2026” மாரத்தான் போட்டியில் 10,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பொதுமக்களிடையே போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது. கோவை மதுக்கரை – மாதம்பட்டி மேற்கு புறவழிச்சாலையில் இன்று காலை 5 மணிக்கு மாரத்தான் தொடங்கியது.

நிகழ்ச்சியை அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், ஐஜி ரம்யா பாரதி, எஸ்.பி. பவன்குமார் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Also Read:ஓடிடியில் சுதந்திர தின வருகையாக வரும் ; பாரத் பாக்ய விதாத்தாரிசை கட்டி நிற்கும் 9 படங்கள்…!

மாரத்தான் தொடங்குவதற்கு முன்பாக போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

Advertisement

“ஒரு நோக்கத்திற்காக ஓடுவோம்! போதைப்பொருள் இல்லா கோவைக்காக ஓடுவோம்!” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற மாரத்தானில் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என 10,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Also Read: கோவை தீயணைப்புத் துறையில் அதிரடி பயிற்சி; ஸ்கை லிப்டில் உயர்மட்ட மீட்பு பயிற்சி

“ஒரு முடிவின் தொடக்கம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு, போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வரிசையில் நின்று உணவு வாங்கி; மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்ட கனிமொழி எம்.எல்.ஏ.!

கோவை அசோகபுரம் அரசு பள்ளியில் மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட கனிமொழி எம்.எல்.ஏ.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...