தமிழ், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய காதல் முறிவு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது பேட்டி வைரலான நிலையில், அனுபமாவின் முன்னாள் காதலர் குறித்து முன்னணி சினிமா பிரபலம் ஒருவர் கூறிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். அதன்பிறகு, தனுசின் டிராகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, அதர்வாவுடன் தள்ளிப்போகாதே, ரவி மோகனுடன் சைரன், பிரதீப் ரங்கநாதனுடன் டிராகன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
துருவ் விக்ரம் அனுபாமா
கடந்தாண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்த பிறகு தான், காதல் கிசுகிசு வலையில் அனுபமா சிக்கினார். அதாவது, அனுபமா மற்றும் துருவ் விக்ரமும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதனை உறுதி செய்யும் விதமாகவே, இருவரின் சமூக வலைதளப் பதிவுகள் இருந்து வந்தன. இருப்பினும், இது வதந்தி என்று ஒருபுறம் கூறப்பட்டாலும், இந்த கிசுகிசுக்களை இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால், இருவரும் காதலித்து வருவது உறுதிதான் என்று பேச்சு எழுந்தன.

இந்த சூழலில், அனுபமா தனது காதலரின் பெயரை குறிப்பிடாமல், அவருடைய சுயரூபம் மற்றும் அவரால் தனக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து அவர் வெளிப்படையாக கூறியிருந்தார்.
இருவரின் காதல் குறித்து எதையும் உறுதி செய்யப்படாத நிலையில், நடிகை அனுபமா பரமேஸ்வரனின் காதல் முறிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது; கடந்த சில வருஷங்களாக நான் வெளியே சந்தோஷமாகவும், நன்றாகவும் இருப்பது போல் நடித்து வருகிறேன்.
ஆனால், உண்மையில் பதற்றம், மன அழுத்தம், பேனிக் அட்டாக், உடை குறைவு, கை மற்றும் கால் நடுக்கம் போன்ற பிரச்சினைகளை சந்தித்து வந்தேன். இரவெல்லாம் அழுதுவிட்டு, மறுநாள் சினிமா சூட்டிங் செல்வேன்.
Couple theropy
எங்கள் காதலை பிரேக்கப் செய்து விடலாம் என்று கூறி விட்டு, 2 நாள் கழித்து வந்து நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறினார். இது ஏதோ மன ரீதியிலான பிரச்சினையாக இருக்குமோ என்று நினைத்து இருவரும் கப்புள் தெரபி (Couple theropy) எடுத்துக் கொண்டோம்.

என் காதலர் ஒருநாள் அந்நியன் ஆக இருப்பார். மறுநாள் அன்பானவராக ரெமோவாக இருப்பார். அதற்கு அடுத்த நாள், நடந்ததற்கு எல்லாம் மன்னிப்பு கேட்டு அம்பியாக மாறி, குழந்தை போல அழுவார். இதில், எது உண்மை என்று இன்றும் கூட என்னால் சொல்ல முடியவில்லை. காதலித்த அந்தத் தருணங்கள் இன்னும் உண்மையாக தெரிகிறது. கோபப்பட்ட நேரங்களும் உண்மையாகத் தான் தோன்றுகிறது.
இதுபோன்ற சூழல்களை எதிர்கொண்டதால், மன உளைச்சல் ஏற்பட்டது. கண்களிலும் பிரச்சினை உண்டானது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். கடினமான காலத்தில் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும் போது கூட, அவர் எனக்கு ஆறுதலாக இல்லை. வருங்கால பார்ட்னரிடம் எதிர்பார்ப்பது பொறுப்புணர்ச்சி மட்டுமே.
மன்னிப்பை விட செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றத்தையே அதிகம் நம்புபவள் நான். நான் இப்போது பாதிக்கப்பட்டவள் அல்ல, மீண்டு வந்தவள். இனி என்னுடைய வாழ்க்கையை புதிதாக கட்டமைக்கப் போகிறேன், இவ்வாறு அவர் கூறினார்.
இவரது பேட்டி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில்,அனுபமாவின் இந்தப் பேச்சு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. மேலும், சிலர் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
ஆனால், அனுபமாவின் அம்மாவோ ஒருபடி மேலே போய், இப்போது தான் என்னுடைய மகளுடன் நிம்மதியாக இருப்பது போன்று, அனுபமாவுடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டார்.

இந்த சூழலில், துருவ் விக்ரம் கடல் அலைகளில் இருந்து சிறுவன் ஒருவன் கோபத்தில் வெளியே வருவது போன்ற ஸ்டோரி வைத்திருந்தார். இது அனுபமா விவகாரத்தில் இன்னும் புகைச்சலை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, தன்னுடைய ஏமாற்றத்தை அனுபமா மீண்டும் ஒரு பேட்டியில் ஓபனாக வெளிப்படுத்தியிருந்தார்.
பயில்வான் ரங்கநாதன்
இந்த நிலையில், அனுபமா விவகாரத்தில் துருவ் விக்ரம் தான் அந்தக் காதலர் என்ற பேச்சுக்களும், விமர்சனங்களும் எழுந்து வந்த நிலையில், அனுபமாவை நல்லா அனுபவித்து விட்டு கழற்றி விட பார்த்ததாக பிரபல சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; அனுபமா பரமேஸ்வரன் அவசரப்பட்டு காதலிக்க ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு பெரிய ஸ்டாரோட பையன் என்பதால், நல்லவனாகவும், ஒழுக்கம் இருப்பவனாகவும் இருப்பான் என நம்பி காதலித்து விட்டார். ஆனால், அந்தப் பையனின் வளர்ப்பும், ஒழுக்கமும் எதிர்பார்த்ததை விட வேறு மாதிரி இருந்துள்ளது.
அவருடைய அப்பா அவரை மிகவும் செல்லமாக வளர்த்தி விட்டார். அவர்களை ஒருபோதும் நம்பக் கூடாது என்று சொல்லி சொல்லி வளர்த்துள்ளார்.
இதனால், அந்த நபருக்கு அனுபமா மீது ஒரு நம்பிக்கை கூட வரவில்லை. அதனால் தான் நீ நடிக்கக் கூடாது. அந்தப் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு போகக் கூடாது, அந்த உடை போடக் கூடாது என்று சொல்லி சொல்லி அவரை டார்ச்சர் செய்து கொண்டு இருந்துள்ளார். இதனால், அந்த நடிகை 2 வருடமாக படத்தில் கூட நடிக்காமல் இருந்து வந்துள்ளார்.
அனுபாமா தப்பிவிட்டார்
அந்த நடிகையை அனுபவித்து விட்டு, கழற்றி விட்டு விட்டலாம் என்ற நம்பிக்கையில் தான் இப்படி எல்லாம் செய்து இருக்கிறார். நல்ல வேளையா அந்த நடிகை இதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு, காதலை முறித்துக் கொண்டு தப்பி விட்டார். இவ்வாறு கூறினார்.
அனுபமா, துருவ் விக்ரமின் காதலும், அதன் பிரேக்கப்பும் எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியாத நிலையில், சமூக வலைதளங்களில் இவர்களைப் பற்றிய பேச்சுக்களே வைரலாகி வருகிறது.





