ஓணம் பண்டிகை சிறப்பு சலுகை! ரூ.1-க்கு BSNL சிம் கார்டு – 24 நாட்களுக்கு Unlimited Calls, 1GB Data!

கோவை :ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ரூ.1-க்கு சிம் கார்டு வழங்கும் சிறப்பு முகாமை பிஎஸ்என்எல் நிறுவனம் கோவையில் நடத்தியது.

Advertisement

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த சிறப்பு சிம் கார்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மகாபலி அரசன் வேடம் அணிந்தபடி வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில், வெறும் ரூ.1 செலுத்தி பிஎஸ்என்எல் சிம் கார்டை பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டது.

Also Read: உள்ளாடையில் 2,100 போதை மாத்திரைகள் ; கோவை முழுவதும் சப்ளை? இன்ஸ்டாவில் தகவல் பரிமாற்றம்!

Advertisement

இந்த சிம் கார்டில் 24 நாட்களுக்கு Unlimited Calls, தினசரி 1GB Data மற்றும் 100 SMS உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், பிஎஸ்என்எல் FTTH வாடிக்கையாளர்களுக்காக மாதம் ரூ.1,199 மதிப்புள்ள திட்டம் சிறப்பு சலுகையாக ரூ.1,111-க்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 200 Mbps வேகம், Unlimited Calls மற்றும் 12 OTT தளங்களுக்கான சந்தா உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

கோவை மாவட்டத்தில் சுதந்திர தினம் முதல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில் இந்த சிறப்பு சிம் கார்டு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

Also Read: நீதிபதி உத்தரவின்பேரில் சிங்காநல்லூர் குளக்கரையை வக்கீல் குழுவினர் ஆய்வு; எதற்காக?

இதன் தொடர்ச்சியாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமை பிஎஸ்என்எல் கோவை மாவட்ட பொதுமேலாளர் சுப்ரமண்யம் தொடங்கி வைத்தார்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இந்த சிறப்பு சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டு, ரூ.1-க்கு சிம் கார்டைப் பெற்று பிஎஸ்என்எல் வழங்கும் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...