நீதிபதி உத்தரவின்பேரில் சிங்காநல்லூர் குளக்கரையை வக்கீல் குழுவினர் ஆய்வு; எதற்காக?

கோவை: சிங்காநல்லூர் குளத்தின் நிலை, சாலை பணிகள் மற்றும் கழிவுநீர் கலப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் வக்கீல் குழுவினர் அக்குளக்கரையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

கோவை சிங்காநல்லூரில் உள்ள குளக்கரையில் சாலை மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில், அந்த நிலம் வருவாய்த்துறை ஆவணங்களில் கால்வாய் என்று உள்ளதாகவும், எனவே இங்கு எந்த விதமான மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிங்காநல்லூர் குளக்கரையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

Also Read: Coimbatore power cut: கோவையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள்?

Advertisement

மேலும், சிங்காநல்லூர் குளத்தின் நிலை, சாலை பணிகள் மற்றும் கழிவுநீர் கலப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இக்குழுவுக்கு வக்கீல் முகமது சாதிக் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து நேற்று முகமது சாதிக் தலைமையிலான வக்கீல் குழுவினர் சிங்காநல்லூர் குளக்கரைகளில் ஆய்வு செய்தனர்.

Advertisement

அப்போது குளக்கரையில் கால்வாய் என்று உள்ள சர்வே எண்களையும், அங்கு நடைபெற்ற சாலை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள், மீன்பிடித்தல், தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

Also Read:ஒரு செங்கலைக் கூட வைக்க முடியாது- மேகதாது விவகாரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி…

விரைவில் இந்த ஆய்வு அறிக்கை தயார் செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என வக்கீல் குழுவினர் தெரிவித்தனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...