வரிசையில் நின்று உணவு வாங்கி; மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்ட கனிமொழி எம்.எல்.ஏ.!

கோவை: கோவை அசோகபுரம் அரசு பள்ளியில் மாணவிகளுடன் வரிசையில் நின்று காலை உணவு வாங்கி சாப்பிட்ட கனிமொழி எம்.எல்.ஏ., பின்னர் தனது தட்டையும் தானே கழுவி வைத்தார்.

Advertisement

கோவை துடியலூர் அருகே அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டத்தை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களைப் போலவே வரிசையில் நின்று உணவை வாங்கி, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.

உணவு சாப்பிட்டு முடித்ததும் தனது தட்டை எடுத்துச் சென்ற கனிமொழி சந்தோஷ், மாணவர்கள் செய்வது போலவே தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைத்தார்.

தொடர்ந்து பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தையும் அவர் பார்வையிட்டார். உணவு தயாரிக்கும் இடத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுவையாகவும் தரமாகவும் உணவு வழங்க வேண்டும் என்றும் சமையல் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.

Advertisement

இதுகுறித்து கனிமொழி சந்தோஷ் கூறுகையில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் காலையில் உணவு சாப்பிடாமல் இருப்பதை தவிர்த்து, அவர்களுக்கு சத்தான காலை உணவு கிடைப்பதன் மூலம் வகுப்பறையில் கல்வியில் முழு கவனம் செலுத்தும் சூழல் உருவாகும் என்றார்.

கல்வியுடன் ஊட்டச்சத்தையும் இணைக்கும் இந்த திட்டம், மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்துக்கும், கல்வி முன்னேற்றத்துக்கும் உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும், பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவருக்கும் கல்வியுடன் ஊட்டச்சத்தையும் வழங்கும் நோக்கில் திட்டம் விரிவுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கனிமொழி சந்தோஷ் கேட்டறிந்தார். மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...