வீட்டுக்குள் புகுந்து கொள்ளை முயற்சி! சிக்கிய நபரை மரத்தில் கட்டிய பொதுமக்கள் -VIDEO

கோவை: கோவை மதுக்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படும் நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மதுக்கரை அடுத்த நாச்சிபாளையம் கூலிமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பீரோவை திறக்க முயன்ற அந்த நபர், அதில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருட முயன்றதாக தெரிகிறது.

அப்போது பீரோவை உடைக்க முயன்றபோது சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டு, திருடன் புகுந்திருப்பதை அறிந்தனர். உடனடியாக அவர்கள் சத்தமிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர்.

சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், வீட்டில் இருந்து தப்பி ஓட முயன்ற நபரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் தப்பிச் செல்லாத வகையில் அருகில் இருந்த மரத்தில் கயிற்றால் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

VIDEO

இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நபரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Advertisement

பிடிபட்ட நபர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர், தனியாக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், அவருக்கு இதற்கு முன்பு நடைபெற்ற கொள்ளை அல்லது திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அண்ணா சிலை “ஹெல்மெட் இல்லாம 3 பேர் போறீங்களே!” – ட்ரைவர் அட்வைஸ் ; நடுரோட்டில் அலப்பறை செய்த பெண்கள் – வீடியோ

கோவை அண்ணா சிலை அருகே அரசு பேருந்தை மறித்து பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...