கோவை : கோவை நீலிகோணாம்பாளையம்–இ.எஸ்.ஐ. சாலையில் உள்ள கடையில் சிங்காநல்லூர் போலீஸார் நடத்திய சோதனையில் 109 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக புலியகுளத்தைச் சேர்ந்த வியாபாரி முத்துக்குமார் (44) கைது செய்யப்பட்டார்.
கோவை நீலிகோணாம்பாளையம்–இ.எஸ்.ஐ. சாலையில் மதுரை வீரன் கோயில் அருகே உள்ள கடையில் சிங்காநல்லூர் போலீஸார் நடத்திய சோதனையில் 109 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக புலியகுளத்தைச் சேர்ந்த வியாபாரி முத்துக்குமார் (44) கைது செய்யப்பட்டார்.
கோவையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவைக் கடைகளிலும் கிடங்குகளிலும் பதுக்கி விற்பனை செய்வோரைக் கண்டறிய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை வீரன் கோயில் அருகே உள்ள கடையில் குட்கா பதுக்கி விற்பதாக சிங்காநல்லூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
சவுரிபாளையத்தில் வழிப்பறி – தங்க மோதிரம், Google Pay மூலம் ரூ.22,100 பறிப்பு
ரகசியத் தகவலின் பேரில் சோதனை
அந்தத் தகவலின் அடிப்படையில் நவம்பர் 11ஆம் தேதி போலீஸார் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 109 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்தனர்.
Also Read: குட்டிகளுடன் இருந்த தாய் நாய் தாக்கப்பட்டு உயிரிழப்பு- பால் குடிக்கும் குட்டிகள் தவிப்பு!
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வியாபாரி
இதுதொடர்பாக, ராமநாதபுரம் புலியகுளம் கருப்பராயன் கோயில் தெருவைச் சேர்ந்த வியாபாரி முத்துக்குமாரை சிங்காநல்லூர் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





