தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை- துணை இணையதள முகப்பு திறப்பு

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 2025 – 2026ம் ஆண்டுக்கான துணை இணையதள விண்ணப்ப முகப்பு திறக்கப்பட்டுள்ளது.

கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப்படிப்புகளுக்கு 2025-2026ஆம் கல்வியாண்டிற்கு மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டயப்படிப்பு பாடப்பிரிவில் விண்ணப்பிக்க இணையதள முகப்பு (Application Portal) திறக்கப்பட்டது.
இன்று 21.08.2025 முதல் 29.08.2025 வரை இந்த முகப்பு திறந்திருக்கும்.

விண்ணப்பதாரர்கள் http://tnau.ucanapply.com என்ற இணையதளத்தின் மூலமாக துணை இணையதள விண்ணப்பத்தினை (SUPPLEMENTARY ONLINE APPLICATION) பூர்த்தி செய்யலாம். மேலும் துணை இணையதள விண்ணப்பம் விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள்ன.
அதன்படி ஏற்கனவே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. அவ்வாறு விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொது விண்ணப்பித்தினை இடைநிறுத்திய மற்றும் சமர்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

துணைத்தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த துணைக்கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கென்று தனி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இந்த துணைத்தேர்வாளர்கள் ஏதேனும் தவறான தகவல்களை வழங்கினாலோ அல்லது மேலே குறிப்பிட்ட விதிமுறைகளை மீறினாலோ அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி 29.08.2025 ஆகும்.

மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண் கல்லூரிகளையும் (உறுப்பு மற்றும் இணைப்பு), வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களையும் அணுகலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலும் மின்னஞ்சல் (email) : ugadmissions@tnau.ac.in மூலமாகவும் வாரநாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தொடர்புகொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.