கல்வி நிதிக்காக போராடும் எம்பி- கோவையில் வழக்குரைஞர்கள் ஆதரவு போராட்டம்

கோவை: கல்வி நிதிக்காக போராடிவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திக்கு ஆதரவாக கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

Advertisement

மத்திய அரசு SSA திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் உள்ளதை கண்டித்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் குறிப்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார் உடல்நிலை பாதிக்கப்பட்ட பொழுதும் மருத்துவ சிகிச்சை பெற்று தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கோவையில் இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கோவை நீதிமன்ற வளாகம் நுழைவாயில் முன்பு சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு உடனடியாக கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தவெக அரசின் முதல் பட்ஜெட்- இரயில்வே உற்பத்தியாளர் நல தலைவர் கூறிய கருத்து…

கோவை: தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட், தொழில்துறையினருக்கு எந்தவித அறிவிப்பும் இல்லாததால் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது எனஇரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் பேட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று புதியதாக...

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.