பிங்க் பஸ்க்கு எல்லாம் மகளிர் ஓட்டு போட மாட்டார்கள்- வானதி சீனிவாசன் பேட்டி…

கோவை: மகளிர் இலவச பேருந்திற்கு எல்லாம் மகளிர் ஓட்டு போட மாட்டார்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை புளியகுளம் பகுதியில் ஆரோக்கியமான மகளிர் வலிமையான குடும்பம் திட்டத்தின் கீழ் மகளிர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு முகாமை பார்வையிட்டார். தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், பிரதமர் பிறந்தநாள் பரிசாக மத்திய அரசால் ஆரோக்கியமான மகளிர் வலிமையான குடும்பம் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் பெண்களுக்காக 75 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கோவையில் மோடியின் தொழில் மகள் நிகழ்ச்சி 20ம் தேதி வடக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ளதாகவும். அந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

மோடிக்கு அரசியல் ரீதியாக என்ன் பிறந்தநாள் பரிசு கொடுக்கப் போகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், அரசியல் ரீதியாக இந்த முறை தமிழகத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவிற்கு இரட்டை இலக்கத்தில் பாஜக எம்எல்ஏக்களை அடுத்த பிறந்த நாளில் பரிசாக கொடுக்கப் போகிறோம் அதில் எந்த மாற்றமும் கிடையாது என தெரிவித்தார்.

டெல்லியில் பாஜக தலைவர்களை அதிமுக தலைவர்கள் சந்திப்பது அரசியலில் பேசு பொருளாகியுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அது அரசியலில் பேசு பொருள் தான் டெல்லி சென்றுள்ளது தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு தலைமை ஏற்று கொண்டிருப்பவர் அவர் சென்று எங்கள் தலைவர்களை பார்க்கிறார், வேறு யாராவது பார்த்தால் தான் அது அரசியல் என பதில் அளித்தார். கூட்டணி தலைவர் கூட்டணி தலைவர்களை பார்ப்பதில் என்ன அரசியல் உள்ளது என கேள்வி எழுப்பிய அவர், அனைவரும் எங்கள் கட்சித் தலைவர்களை தான் பார்க்க செல்கிறார்கள் டெல்லியில் இன்னொரு அரசியல் தலைவரும் இருக்கிறார் அங்கு யாரும் செல்லவில்லை என தெரிவித்தார்.

விஜயின் பிரச்சாரத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசியல் கட்சி பிரச்சாரம் எனும் பொழுது எங்களுடைய பேனர்களையும் கட்சிக் கொடிகளையும் இங்கு அதிகமாக வைக்க விட மாட்டார்கள் என்றும் விஜய் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதால் அதிகமாக தெரிய வருகிறது, தமிழக அரசு மற்ற அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு எந்த அளவு கெடுபிடிகளை காட்டுகிறார்கள் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்பது தெரிய வருகிறது இதனை நாங்கள் ஏற்கனவே அனுபவித்து தான் வருகிறோம் என கூறினார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் இலவச பேருந்தான பிங்க் பேருந்து குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அந்தப் பிங்க் பஸ்ஸை துணை முதல்வர் வந்து பார்க்க வேண்டும் என்றும் பிங்க் பெயிண்ட் அடித்தால் மட்டும் அது பிங்க் பஸ் ஆகி விடாது, அதனை வைத்து மகளிரை ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் அந்த பஸ் அதிகமாக விடப்படுவதில்லை அப்படியே அது வந்தாலும் பாதி வழித்தடத்தில் நின்று விடுகிறது எனவே இதனை வைத்து பெண்கள் ஓட்டு போட போவதில்லை என்று துணை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

அரசு ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் தேர்வுகள் நடைபெறுகிறதோ தேர்வு முடிவுகள் வரும் பொழுதெல்லாம் லீகல் பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்வதாகவும் இது பற்றி அரசு யோசிக்க வேண்டும் என்றும் கூறினார். நீதிமன்றத்தில் எதற்காக இந்த வழக்குகளை எடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதனை சரி செய்து தேர்வை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். திமுக கட்சியை போன்று தான் தேர்வுகளும் உள்ளது என சாடினர்.

பாஜக பிரசாரத்திற்கு பஸ் வருமா என்ற கேள்விக்கு உங்கள் மாநிலத் தலைவர் எப்படி வருகிறார் என்பதை வரும்போது பாருங்கள் இப்பொழுது கூறினால் சஸ்பென்ஸ் போய்விடும் என கூறினார். மாநிலத் தலைவரின் சுற்றுப்பயணம் குறித்து பொறுப்பாளர்கள் அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.