Header Top Ad
Header Top Ad

தமிழகத்தில் இந்த சீர்த்திருத்தம் வரவேண்டும்- தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்ட அந்த சீர்த்திருத்தம் என்ன?

கோவை: தமிழகத்தில் வாக்குச் சீட்டு சீர்திருத்தம் வரவேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழிசை சௌந்தரராஜன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் வெற்றியடைந்த ஒரு தொகுதிக்கும் அவர் வாழ்ந்து கொண்டிருந்த பகுதிக்கும் நான் வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

தமிழரை துணை குடியரசு தலைவராக ஆக்கியிருக்கிறோம் பெருமையோடு நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம் என்றும் அதேசமயம் தமிழ்நாட்டில் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்தார்கள் என்று ஒரு கட்சி ஆட்சி செய்து கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு தமிழ் மக்கள் தான் ஓட்டு போட்டார்கள் என்றும் திமுகவை சுட்டிக்காட்டிய அவர் தமிழருக்கு எந்த ஒரு ஆதரவையும் கொடுக்காததை வரலாறு மன்னிக்காது என தெரிவித்தார். முப்பெரும் விழா நடத்தினாலும் நாப்பெரும் விழா நடத்தினாலும் இனிமேல் உங்களுக்கு வெளியேற்றம் தான் என தெரிவித்தார்.

No ReEntry For DMK என்று தெளிவாக கூற முடியும் என தெரிவித்தார். நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி ஜிஎஸ்டி என்ற பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதற்கு ஒரே இடத்தில் ஆவது நன்றி கூறினீர்களா என கேள்வி எழுப்பினார். யார் எதிர்த்தாலும் நாங்கள் தான் ஜெயிப்போம் என்று செந்தில் பாலாஜி கூறுகிறார் அதற்கு 200 என்பதை குறிப்பிடுகிறார் என்பதை சுட்டிக்காட்டிய தமிழிசை சௌந்தரராஜன் உங்களுக்கு 200 300 400 என்பது பழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்த அவர் அதனால் தான் நீங்கள் தோற்கவும் போகிறீர்கள் எனக் கூறினார்.

Advertisement

ஜி எஸ் டி யில் எதெல்லாம் குறைந்து உள்ளது என்பது பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் ஷாப்பிங் சென்று மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் என கூறினார். உதயநிதி ஸ்டாலின் செங்கலை தூக்கிக் கொண்டிருக்கிறார் நாங்கள் செங்கோலை வைத்துக் கொள்கிறோம் என கூறிய அவர் செங்கலை எல்லாம் இனி புடுங்க முடியாது என்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தெரிவித்தார். பல்வேறு பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெறாமல் இருக்கிறது என கூறிய அவர் முதலில் பஞ்சாயத்து உரிமைகளை பெற்று தாருங்கள் பிறகு மாநில உரிமைகளை பற்றி பேசலாம் என தெரிவித்தார்.

காங்கிரஸில் நீங்கள் சரணடைந்து விட்டீர்களா என கேள்வி எழுப்பிய அவர் உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வரும் பொழுது சரணடைந்து நம் நாட்டில் ஒரு பகுதியை கொடுத்துள்ளார்கள் எனவும் கூறினார். நேற்று நடந்த திமுக முப்பெரும் விழாவில் பதற்றம் தெரிந்ததாகவும் கூறினார்.

விமானத்தில் வரும் பொழுது தமிழக வெற்றி கழகம் தொண்டர் ஒருவர் முதலமைச்சர் தங்களைப் பற்றி எதுவும் பேசவில்லை என்று தன்னிடம் கேட்டதாகவும் அதற்கு எங்களைப் பற்றி அதிகமாக பேசிவிட்டார் அதனால் உங்களைப் பற்றி அதிகம் பேசாமல் இருந்திருக்கலாம் ஆனால் நாங்கள் அனைவரும் எதிர்த்து கொண்டு தான் இருக்கிறோம் என்று பதில் அளித்ததாக கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் மாற்றம் எங்கு வரவேண்டும் என்றால் அது திமுக மீது தான் வர வேண்டும் என்றும் விஜய் திமுகவை மற்றும் சாடினால் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள் என்று பாஜகவையும் இழுத்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் உங்களது எதிர்ப்பை திமுக மீது தீவிரமாக காட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அமித்ஷாவை பார்த்து விட்டு வரும்பொழுது முகத்தை துடைத்தேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார் என்றும் இதில் எல்லாம் அரசியல் செய்வது என்று ஒன்று இல்லையா என கேள்வி எழுப்பினார். ஊழலை முதலில் மறையுங்கள் என தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன் ஏழு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் இது அனைத்தையும் விட சிரிப்பு எதுவென்றால் செந்தில் பாலாஜி மாநாடு போன்ற முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்தியுள்ளார் என்று முதல்வர் கூறியதை குறிப்பிட்டு செந்தில் பாலாஜி எத்தனை நாட்கள் வெளியில் இருக்கப் போகிறார்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் செந்தில் பாலாஜி மீது ஏன் வழக்கு போட்டீர்கள் தற்பொழுது ஏன் பாராட்டுகிறீர்கள் என்றும் வினாவினார்.

தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படவில்லை என்று கம்யூனிஸ்டுகள் போராட போகிறார்கள் என்பதை குறிப்பிட அவர் கம்யூனிஸ்ட் காரர்கள் நீங்கள் யாருடன் கூட்டணியில் இருக்கிறீர்கள் எதற்காக எதிர்த்து போராடுகிறீர்கள் என கேள்வி எழுப்பி கூட்டணியை விட்டு வெளியே வருவோம் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த பொழுது போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றுவதற்கு நான் கையெழுத்து விட்டேன் என்றும் உங்களால் அது செய்ய முடியுமா என கேள்வி எழுப்பினார். பாஜக என்றும் மக்களுக்கு நல்லது தான் செய்து கொண்டிருக்கிறது என்றும் அதற்கு மக்கள் ஒரு வாய்ப்பை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதிமுக பாஜக கூட்டணி வராமல் இருந்தால் நல்லது என்ற திமுகவினர் நினைத்தார்கள் ஆனால் கூட்டணி வந்துவிட்டது இருவரும் சந்திக்காமல் இருந்தால் நல்லது என்று நினைத்தார்கள் ஆனால் சந்தித்து விட்டார்கள் பேசாமல் இருந்தால் நல்லது என்று நினைத்தார்கள் ஆனால் பேசி விட்டார்கள் என திமுகவில் சாடிய அவர் திமுக கூட்டணி மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை எதிர் கூட்டணிகளில் பிரிவில் தான் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார். கவர்னர் தொடரட்டும் நாங்கள் ஜெயித்து விடுவோம் அண்ணாமலை இருக்கட்டும் நாங்கள் ஜெயித்து விடுவோம் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வருடம் வாழட்டும் நாங்கள் ஜெயித்து விடுவோம் என்று தான் கூறுகிறார்கள் என்றும் மற்றவர்களை வைத்துதான் நீங்கள் ஜெயிப்பீர்களா நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமியும் உள்துறை அமைச்சரும் சந்தித்து விட்டார்கள் என்ற பதற்றம்தான் முப்பெரும் விழாவில் தெரிந்ததாக கூறினார்.

முதலில் கட்சிப் பொறுப்பை தான் திமுகவினர் வாரிசுகளுக்கு கொடுத்து வந்ததாகவும் ஆனால் தற்பொழுது விருதுகளையும் வாரிசுகளுக்கு கொடுப்பதால் திமுக தொண்டர்கள் பாவம் என கூறினார்.

குடும்ப அரசியல் காரணமாக ஒரு சில கட்சிகள் பிரிந்து விட்டது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் உட்க்காட்சியில் சில பிரச்சினைகள் இருக்கிறது என்றும் அது கட்சி போராட்டம் என்பதை விட பாச போராட்டம் என்று தான் நினைப்பதாக தெரிவித்தார். பாமகவில் அது சரியாகிவிடும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

வனத்துறையை எதிர்த்து பாஜக சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்த அவர், கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் பல்வேறு ரிசார்டுகள் கட்டப்பட்டு மிருகங்கள் வாழ்கின்ற இடத்தில் இவர்கள் வாழ்கிறார்கள் என்பதால் மக்கள் வாழ்கின்ற இடத்திற்கு மிருகங்கள் வந்து விடுவதாக தெரிவித்தார். இதனை தடுக்காமல் இருப்பதாகவும் இதற்கு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தனக்கு காலையில் இருந்து காவல்துறையினர் தொடர்ச்சியாக போன் செய்து கோவைக்கு எதற்கு செல்கிறீர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு செல்கிறீர்களா என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தார்கள் என கூறினார்.

மெட்ரோவில் நான் ஆர்ப்பாட்டம் செய்ததைப் போலவே விமானத்தில் ஆர்ப்பாட்டம் செய்து விடுவேனோ என்று தொடர்ச்சியாக கேட்டதாகவும் ஏன் அந்த பதற்றம் என கேள்வி எழுப்பினார். ஆனைகட்டியில் யானைகளையும் மிருகங்களையும் வாழவிடுங்கள் அங்கு ஆக்கிரமிப்புகள் செய்யாதீர்கள் என்று மாநில அரசையும் வனத்துறையையும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

காந்தி என்ற பெயரை திருடி வைத்துள்ளது யார் என்று கேள்வி எழுப்பினார். மிஷின் வைத்தாலும் வாக்குச்சீட்டு வைத்தாலும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் நாங்கள் வாக்குச்சீட்டு திரட்டினால் வெற்றி பெறவில்லை உழைப்பினால் வெற்றி பெற்றுள்ளோம் என தெரிவித்தார். எனவே தமிழ்நாட்டிலும் வாக்குச்சீட்டு சீர்திருத்தம் வரவேண்டும் என்று தான் நினைப்பதாக கூறினார். திமுக வெற்றி பெற்று வந்ததும் மேலே சென்றதும் மேலே சென்றவர்களால் தான் என மறைந்த மூத்த தலைவர்களை மறைமுகமாக சுட்டிக்காட்டிய அவர் அந்த லிஸ்ட்டை சரியாக வைத்துக் கொண்டு தான் ஓட்டு போடுவார்கள் என்றும் இனி மேல் அதெல்லாம் முடியாது எனவே தமிழ்நாட்டில் வாக்கு சீட்டு சீர்த்திருத்தம் தமிழகத்தில் வரவேண்டும் என தெரிவித்தார்.

Recent News