இந்தியாவில் GenZ என்றால் மரியாதை இல்லை; கோவையில் அண்ணாமலை பேச்சு

கோவை: கோவையில் ஆபரேசன் சிந்தூர் புத்தகத்தை We The Leader தலைவர் அண்ணமலை வெளியிட்டார்.

Advertisement

கோவை பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற சுதேசி மேளா நிகழ்வில் We The Leaders தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மேஜர் மதன்குமார் எழுதிய Operation Sindoor புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் அண்ணாமலை அனைவரும் நாட்டுக்காக இராணுவத்தினர் எந்த அளவு போராடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்றார்.

அமரன் திரைப்படம் வந்த பிறகு முதுந்தனின் தந்தை தாயார் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆகிவிட்டனர் என்றும் அவர்கள் நமக்கு இலக்கணமாக இருப்பதாக கூறினார்.

Advertisement

மேஜர் மதன் குமார் பேசுவது தான் நமக்கு செய்தி என்ற அவர் தவறான செய்தியை உலகம் முழுவதும் பரப்பிய போது மதன்குமார் YouTubeல் Operation Sindoor பற்றி பேசி முழுமையாக விளக்கியவர் மதன்குமார் என்றார்.
இந்த வீடியோக்கள் மூலம் எத்தனையோ குழந்தைகளுக்கு இந்திய இராணுவம் பற்றி தெரிந்து கொள்வார்கள் என்று கூறினார்.

இந்திரா காந்தி அப்துல் கலாம் ஐயா விடம் மிசைல் பற்றி பேசினார் பிறகு ராஜிவ் காந்தி கலாம் ஐயாவிடம் மீண்டும் ஒரு மிசைல் பற்றி பேசியுள்ளார் பிறகு நரசிம்மராவ் அப்துல்கலாமிடம் அணு சோதனைக்கு ஆயத்தம் ஆக வேண்டுமென கூறியுள்ளார் பிறகு வாஜ்பாய் கலாம் ஐயாவிடம் பட்டாசு வெடிக்க தயாராக வேண்டுமென கூறி போக்ரான் இடத்தில் சோதனை நடத்த வேண்டுமென கூறி யாருக்கும் தெரியாமல் அப்துல்கலாம் சோதனையை செய்து முடித்தார் என்றார். மேலும் அப்துல்கலாம் ஐயாவை யாரும் மறக்க கூடாது என்று தெரிவித்தார்.

Advertisement

ஆப்ரேசன் சிந்தூர் செலவு 408 மில்லன் டாலர் ஆகும் என்றும் எவ்வளவு பெரிய யுத்தமாக இருந்தாலும் நாம் செய்ய முடியும் அந்த அளவு பொருளாதாரம் உள்ளது என்றார்.
நமக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரம் என்பது 25 பைசா 500 ரூபாய் போன்றது என்றும் நாம் பாகிஸ்தானுக்கு 14,500 கோடி சேதம் விளைவித்துள்ளோம்
ஒரு அறைக்கு நான்கு அறை என்ற அளவிற்கு நாம் எதிரிக்கு கொடுத்துள்ளோம் என்றார்.

Operation Sindoor பிறகு நம் ராணுவ தளவாடங்களை உலக நாடுகளே பார்த்தது பெகல்காம் துவங்கி ஆபரேசன் சிந்தூர் வரை இந்த புத்தகத்தை உள்ளது இந்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்றார்.

இராணுவத்தை பொறுத்தவரை அனைத்தையும் தெரிந்தவர்கள் தான் தேவை இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும், இந்தியாவில் GenZ என்றால் பெரிதளவு மரியாதை இல்லை. Gen Z உங்களுக்கு பெரிய Purpose உள்ளது
uniform Service யை நோக்கி நீங்கள் செல்ல வேண்டும் என்றார். நல்லவர்களை போற்றுவோம் பாராட்டுவோம் என்றார்.

இந்த நிகழ்வில் மேஜர் முதுந்தனின் தந்தை வரதராஜன் உட்பட முன்னாள் படைவீரகள் அவர்களது குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.