கோவையில் பல பைக்குகளை திருடிய பலே திருடன் சிக்கினான்!

கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளில் பைக்குகளை திருடிய பலே திருடன் பீளமேடு போலீசாரிடம் சிக்கியுள்ளான்.

கோவை மாநகர பிளமேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

அதன்படி, இன்று காலை 11 மணியளவில் சின்னியம்பாளையம் டீச்சர் காலனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த ஒரு நபரை நிறுத்தி ஆவணங்களிய சோதனை செய்தனர்.

அப்போது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். சுதாரித்த போலீசார் அந்த நபரிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நபர் இயக்கி வந்த பைக் பீளமேடு பகுதியில் திருடியது என்பதை ஒப்புகொண்ட அவர், தன் பெயர் அஜித்குமார் என்று தெரிவித்தார்.

அவர் மீது சந்தேகம் எழுந்ததால், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பீளமேடு மட்டுமல்லாது, சிங்காநல்லூர், இராமநாதபுரம் உள்ளிட்ட கோவை மாநகர பகுதிகளிலும் மற்றும் சூலூர், தாராபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் வளைத்து வளைத்து பைக்குகளை திருடியது தெரியவந்தது.

தொடர்ந்து அவர் திருடிய 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News

கிருஷ்ணா ஸ்வீட் இனிப்புகளில் வனஸ்பதி எண்ணெயா?- கோவையில் அதன் நிர்வாக இயக்குநர் அளித்த விளக்கம்…

கோவை; கிருஷ்ணா ஸ்வீட் இனிப்புகளில் வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக வெளியான செய்திக்கு அதன் நிர்வாக இயக்குனர் மறுப்பு தெரிவித்துள்ளார். கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக செய்திகள்...

Video

எலுமிச்சை சுத்தி போட்டதில் ஏற்பட்ட தகராறு- கோவை அருகே பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்…

கோவை: எலுமிச்சை பழம் சுத்தி போட்டதில் தகராறு ஏற்பட்டு இரு வீட்டார் மோதிக்கொண்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் காரமடை அருகே புதிதாக வாங்கிய காருக்கு எலுமிச்சை பழம் சுற்றி திருஷ்டி...
Join WhatsApp