கோவையில் சுடுகாட்டில் தற்போதும் நிலவும் சாதிய கொடுமை- நூதன முறையில் போராட்டம்…

கோவை: கோவையில் தற்பொழுதும் பொது சுடுகாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களை புதைப்பதற்கு எதிர்ப்பு எழுவதாக கூறி பாடைக்கட்டி நூதனப் போராட்டம் மூலம் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீளியூர் கிராமத்தில் பொது சுடுகாடு ஒன்று உள்ளது. ஆனால் இந்த சுடுகாட்டில் அருந்ததிய மக்கள் உயிரிழந்தவர்களின் உடலை புதைப்பதற்கு மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறி பாடை கட்டி ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் நூதன முறையில் போராட்டம் மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாநகர மாவட்ட செயலாளர் ராவணன் கூறுகையில் கடந்த 70 ஆண்டுகளாக இந்த ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும் அந்த பகுதியில் அருந்ததிய மக்கள் உயிரிழந்தால் பள்ளவாரி பகுதியில் உடல்களை அடக்கம் செய்து வருவதாகவும் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் புதைக்கப்பட்ட உடல்கள் வெள்ளத்தில் அடித்து செல்லும் அவல நிலை ஏற்படுவதாக தெரிவித்தார்.

இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளித்தாலும் ஆய்வு நடைபெறுகிறது என்று சாக்குபோக்கு சொல்லி இழுத்தடித்து வருவதாகவும் இனிமேலும் அருந்ததிய மக்கள் உயிரிழந்தால் பொது சுடுகாட்டிற்கு சென்று போராட்டம் நடத்தினால்தான் அதிகாரிகள் கண்ணுக்கு தெரியுமா என்றும் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

Advertisement

அருந்ததிய மக்களின் வாழ்க்கையை கவனத்தில் கொண்டு பொது சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்கோ அல்லது தனியாக சுடுகாட்டு நிலப் ஒதுக்கி தருவதற்கோ ஆவணம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...