கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவான கம்பேக் கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். ரசிகர்களின் ஆதரவு, கேப்டன்சி பொறுப்பு, அடுத்த சீசன் திட்டங்கள் மற்றும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் திறமை குறித்தும் அவர் பேசினார்.
கோவையில் அபினவ் பிந்த்ரா, இளைஞர்கள் விளையாட்டை பதக்கத்திற்காக மட்டுமல்லாமல் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சி, இளம் வீரர்களுக்கான பயிற்சி மற்றும் ஒலிம்பிக் விழுமியக் கல்வி குறித்தும் அவர் பேசினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 110 நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், தற்போதைய ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் கடன் மேலும் அதிகரிக்கும் என்றும் விமர்சித்தார்.
கல்லூரி மாணவியும் மாணவனும் இணைந்து வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் 4 பவுன் தங்கச் செயினை பறித்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகள் மூலம் துப்பு துலங்கிய நிலையில், நகை, 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
“7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாயா?” என தனியார் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கூறி பெண் பயணி நடுரோட்டில் பேருந்தை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த நடைபாதை இளநீர் வியாபாரியின் மகனும், 12ஆம் வகுப்பு பள்ளி மாணவருமான எம். தீபன் ராஜா, தேசிய அளவிலான தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கோவை கற்பகம் கல்லூரியில் நடைபெற்ற District Silambam Championship 2026–2027 போட்டியில், SMV சிலம்பம் அகாடமி மாணவி மானசா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.