“அறிவுரை வழங்கியும் அடங்காத அலட்சியம்” – அவிநாசி சாலையில் 4 பெண்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆபத்தான பயணம்!

கோவை: கோவையின் முக்கியமான மற்றும் பிஸியான அவிநாசி சாலையில், ஒரே இருசக்கர வாகனத்தில் 4 இளம் பெண்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை ஹோப் கல்லூரி பகுதியில் இருந்து கிருஷ்ணம்மாள் கல்லூரி நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தில் 4 பெண்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி, சாலையில் செல்லும் பிற வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில் அவர்கள் பயணித்த காட்சிகள் பின்னால் வந்த காரில் இருந்த நபரால் செல்போனில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், சாலை பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முன்பாகவும் இதே அவிநாசி சாலையில் 3 பெண்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண்களை அழைத்த போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

Advertisement

அப்போது இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட மாட்டோம் என அவர்கள் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

Video

இந்நிலையில், காவல்துறையினர் அறிவுரை வழங்கிய சில நாட்களிலேயே மீண்டும் 4 பெண்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதுபோன்ற செயல்கள் பயணிப்பவர்களின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் பயணிப்பவர்கள் மீது வெறும் அறிவுரையுடன் நிறுத்தாமல், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...