விஜி-ராம்ஜி வேலை குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு…

கோவை: VB-GRAM(G) 125 நாள் வேலை விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம்மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் விக்சிட் பாரத் (VB.GRAM(G)திட்டத்தின்கீழ் 125 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தொடங்கி வைத்தார்.

Advertisement

இந்நிகழ்வின்போது. கூடுதல் ஆட்சியர் சங்கேத் பல்வந்த் வாகே, உதவி திட்ட அலுவலர் (vbgram(g)) சௌந்தர்யா, மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விக்சிட் பாரத் (VB.GRAM(G)திட்டத்தின்கீழ் ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 01.07.2026 முதல் 100 நாட்களிலிருந்து 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். பதிவு செய்த 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படும். கிராம ஊராட்சியை தன்னிறைவு அடையச் செய்யும் வகையில் நீர் பாதுகாப்பு, கிராமப்புற உள்கட்டமைப்புவாழ்வாதார உள்கட்டமைப்பு மற்றும் பேரிடர் தணிப்புப் பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு முன்னுரிமைப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

ஒரு மணிநேர மதிய உணவு இடைவேளை உட்பட 8 மணிநேர வேலை உறுதி செய்யப்படும் பெண்கள், முதியவர்கள்மாற்றுத்திறனாளிகள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கென தனி விகிதாச்சாரத்தின்படி ஊதியம் வழங்கப்படும். கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும், திறன் தேவைப்படாத உடல் உழைப்புப் பணிகளைச் செய்ய விரும்பும் வயது வந்த எவரும் கிராமின் ரோஜ்கார் உத்தரவாத வேலை அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், இயன்றவரை விண்ணப்பதாரர் வசிக்கும் கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். பணியின் காரணமாக ஏற்படும் எந்தவொரு காயத்திற்கும் தொழிலாளி எந்தவிதக் கட்டணமும் இன்றி முழுமையான மருத்துவச் சிகிச்சை பெற உரிமையுடையவர்.

மேலும் பணி விபத்தின் காரணமாக ஏற்படும் மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், தொழிலாளிக்கோ அல்லது அவரது சட்டபூர்வ வாரிசுகளுக்கோ கருணைத் தொகை வழங்கப்படும்பணியிடத்தில் காயமடைந்த பணியாளரின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு இலவச மருத்துவச் சிகிச்சை வழங்கப்படும். பணியாளரின் இறப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், மாநில அரசின் விதிமுறைகளின்படி இழப்பீடு வழங்கப்படும் உள்ளிட்ட அம்சங்களுடன் 01.07.2026 முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் ஆய்வுகளை மேற்கொண்ட வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர்…

கோவை: கோவையில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் வீட்டுவசதி...

Latest News Coimbatore

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.