போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்த முதியவர் திடீரென உயிரிழப்பு

கோவை : கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த 64 வயது முதியவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை கே.கே.புதூர், சின்ன சுப்பண்ணன் வீதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (64) என்பவர், தனது உறவினர் பாக்கியராஜ் ரூ.8 லட்சம் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராமல் ஏமாற்றியதாக சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக சம்பவத்தன்று மதியம், தனது மனைவி ரேணுகா தேவியுடன் ராஜேந்திரன் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

Also Read: சிங்காநல்லூரில் கோயிலுக்கு சென்ற பெண் மாயம்; இருசக்கர வாகனம் மட்டும் மீட்பு

Advertisement

போலீஸ் நிலையத்தின் முதல் மாடியில் விசாரணைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, ராஜேந்திரனுக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக போலீசார் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது நாடித்துடிப்பு குறைவாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Advertisement

Also Read: பார்ட்டி பண்ட் பற்றி திமுகவில் இருக்கும் போது தெரியாது- CPIM சண்முகம் பேட்டி..

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...