துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரயில்வே ஊழியர்களுக்கு கோவை ஊழியர்கள் வீரவணக்கம்

கோவை: துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரயில்வே ஊழியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

1968ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி AIRF/ SRMU சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர்.

Advertisement

அதனை தொடர்ந்து நாடு முழுவதும் செப்டம்பர் 19ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு பல்வேறு ரயில்வே பணிமனைகளில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை ரயில்வே பணிமனையில் SRMU சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ரயில்வே ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர் மேலும் எட்டாவது சம்பள கமிஷன் கமிட்டியை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

விமர்சையாக நடைபெற்ற கோவை பாலமலை அரங்கநாதர் கோவில் திருத்தேரோட்டம்

கோவை: கோவை பாலமலை அரங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவை பெரியநாயக்கன்பாளையத்திற்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலமலை ஶ்ரீ...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...