கோவையில் நோயாளிகளை வரவேற்க காத்திருக்கும் வெறிநாய்கள்! திகைப்பூட்டும் வீடியோ காட்சிகள்

கோவை: கோவை அரசு மருத்துவமனை (CMCH) வளாகத்தில் வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Advertisement

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமல்லாது அண்டை மாவட்ட மக்கள் மற்றும் வெளி மாநில மக்களும் தினந்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த முக்கிய மருத்துவமனையில், நாய்கள் கூட்டமாகச் சுற்றித் திரிவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, மருத்துவமனையின் நூறாவது ஆண்டு கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் டீன் அலுவலகம் முன்பு உள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக நின்று கொண்டு அவ்வழியே செல்வோரை நோக்கி குரைத்தும் அச்சுறுத்தியும் வருகின்றன.

உணவுக் கழிவுகளைத் தேடி வரும் இந்த நாய்கள், சில நேரங்களில் நோயாளிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவை பறிக்க முயல்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

Advertisement

மேலும், நாய்களின் ஆக்ரோஷமான செயல்பாடுகளால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இனி ஜிடி மேம்பாலத்தில் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; ஸ்மார்ட் கண்காணிப்பு துவக்கம்

Advertisement

இதனிடையே, நாய்கள் கூட்டமாகச் சுற்றி வருவதை நோயாளிகளின் உறவினர்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

கோவை மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்து வருவதாகக் கூறினாலும், மருத்துவமனை வளாகத்திற்குள் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கோவையில் சாலையில் ஓடித்திரியும் குட்டி யானையை தாயுடன் சேர்க்க போராட்டம்! வீடியோ காட்சிகள்

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...