சவுரிபாளையம் பகுதியில் அதிர்ச்சி; ஐடி ஊழியர் விபரீதம்

கோவை: கோவை சவுரிபாளையத்தில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை சவுரிபாளையம் மெயின் ரோடு, உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ்மூர்த்தி. இவரது மகன் கோகுல்பிரசாந்த் (30). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி காலை வழக்கம் போல் இவரது தாயார் உமாபரமேஸ்வரி வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர் இரவு 7.30 மணியளவில் அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

Advertisement

அப்போது, கோகுல்பிரசாந்த் அறையில் தூக்கில் தங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள் கோகுல்பிரசாந்த்தை பரிசோதனை செய்து பார்த்த போது அவர இறந்து இருந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கைவினைஞர்கள் தனித்தேர்வு- விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கைவினைஞர் தனித்தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates)...

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...