கோவை: கோவை பீளமேட்டில் வியாபாரி வீட்டில் புகுந்து தங்க நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீளமேடு சித்ரா பூங்காநகரை சேர்ந்த ஆண்டவன் (40) தள்ளுவண்டியில் பஜ்ஜி, போண்டா விற்பனை செய்து வருகிறார். சம்பவ தினத்தில் அவர் மாலை நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வியாபாரத்திற்கு சென்றார்.
கொடுத்த கடனை திருப்பி கேட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது தாக்குதல்
இரவு வீட்டிற்கு திரும்பியபோது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த சுமார் 6¾ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கோவையில் மாயமான காட்டெருமை… வனத்துறையினர் தேடல்
அதில், சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


