சிங்காநல்லூரில் கோயிலுக்கு சென்ற பெண் மாயம்; இருசக்கர வாகனம் மட்டும் மீட்பு

கோவை : கோவையில் கோயிலுக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற பெண் மாயமான சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் காந்தன் (44). இவரது மனைவி வெற்றிச்செல்வி (38). நேற்று காலை, உப்பிலிபாளையத்தில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வருவதாக கணவரிடம் கூறிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

Advertisement

மதியத்திற்குப் பிறகும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த காந்தன், பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். பின்னர் உப்பிலிபாளையம் முருகன் கோயிலுக்குச் சென்று பார்த்தபோது, வெற்றிச்செல்வி சென்ற இருசக்கர வாகனம் மட்டும் சைடு லாக் செய்யப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அவர் அங்கு இல்லை.

இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும், வெற்றிச்செல்வி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் காந்தன், சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...