மேல்முறையீடு ரத்து; இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி – நீதிமன்றம் உத்தரவு

கோவை: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Advertisement

கோவை செல்வபுரம் முத்துசாமி காலனியைச் சேர்ந்தவர் சூர்யா என்ற சூரிய பிரசாத். இவர் கோவை ரயில் நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டி வந்தவர். மேலும் இந்து முன்னணி அமைப்பின் செல்வபுரம் நகர தலைவராகவும் இருந்து வந்துள்ளார். தற்பொழுது இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், 2021 மே 27-ம் தேதி கோவை ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் சூர்யாவுக்கும், மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான பைசலுக்கும் இடையே பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சூர்யா, மறைத்து வைத்திருந்த கத்தியால் பைசலை குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த பைசல், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement

இந்த வழக்கு கோவை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் சூர்யாவுக்கு 2½ ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், மேலும் கொலை மிரட்டல் குற்றத்துக்கு 6 மாத சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனை உறுதி செய்யப்பட்டது.

Advertisement

இதையடுத்து நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.