முதல்வர் விஜய் குறித்து அவதூறு- கோவையில் திமுகவினர் கைது…

கோவை: கோவை மதுக்கரையில் முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறு பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழக வெற்றி கழக தலைவர், முதலமைச்சர் விஜய் குறித்து முகநூலில் அவரது படத்தை மாற்றி சித்தரித்து விமர்சனம் வெளியிட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து மதுக்கரையைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக பிரமுகர் பாலாஜி என்பவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

Advertisement

இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் இது குறித்து விசாரணை நடத்தினார். அப்போது முகநூலில் அவதூறு பரப்பியவர் மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 36) மற்றும் அதே போதையைச் சேர்ந்த மனோஜ் குமார் (வயது 37) என்றும் தெரியவந்தது. 

விஷ்ணு பிரபு சமையல் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். மனோஜ் குமார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இருவரும் தி.மு.க பிரமுகர்கள் என கூறப்படுகிறது. 

அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

போஸ்டர்களை அகற்றிய மாநகராட்சி… ஆனால் சாலையிலேயே குப்பையாக வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவையில் அகற்றப்பட்ட விளம்பர போஸ்டர்கள் சாலையிலேயே குவிந்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்ததுடன் விபத்து அபாயம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Video

திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் புறப்பட்ட தம்பதி- கோவையில் சுவாரஸ்யம்…

கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் விக்ரம் கோவையை சேர்ந்த விகாஷினி இருவருக்கும் கிணத்துக்கடவு பகுதியில்...